Friday, September 28, 2012

தாண்டவம் பட கதை விவகாரம் ருத்ர தாண்டவ ஸ்டேஜுக்கு போயிருக்கு

இயக்குனர் அமீர் ராஜினாமா,உதவி இயக்குனர்கள் யூ டிவி அலுவலகத்தை முற்றுகை இடப் போறாங்க அப்டின்னு இன்னிக்கு வெளில கூலா இருந்த சென்னை க்ளைமேட் ல டைரக்டர்கள் யூனியன் ஆபிஸ் மட்டும் கொதிச்சுப் போயிருந்தது.தாண்டவம் உண்மை நிலவரம் அறியும் குழு சங்க லெட்டர் பேட திருடி யூஸ் பண்ணிட்டதா அமீர் சொன்னாருன்னு சொல்லி அந்தக் குழு உறுப்பினர்கள் சங்கத்துல இருந்து ராஜினாமா பண்ணப் போறோம்னு சொன்னாங்க. பிரச்னையோட ஆரம்பம்
டைரக்டர் ராதாமோகனிடம் மொழி, அபியும் நானும் படங்கள்ல வொர்க் பண்ண, பொன்னுசாமின்ற இணை இயக்குனர் தன்னோட கதை தான் தாண்டவம்னும்,அதை யூ டிவி ஆபிஸ்ல தான் கதையா சொன்னதாவும்,அப்புறம் கதையோட சிநாப்சிஸ சீயான் விக்ரமுக்கு மெயில் பண்ணதாவும்,அத பத்தி எதுவும் கண்டுக்காம கடைசில டைரக்டர் விஜய் அந்த கதைய தாண்டவம் னு படமா பண்ணிட்டதாவும் சங்கத்துல கொடுத்த புகார்ல ஆரம்பிச்சது.
முதல்ல பாலாஜி சக்திவேல் இருந்த அந்த உண்மை அறியும் குழு பின்னாடி அவருக்கு நேரம் இல்லாதது காரணமா எழு பேர் குழுவுக்கு மாறுச்சு.அந்த குழு,புகார் சொன்ன உதவி இயக்குனர் பொன்னுசாமி யோட ஸ்க்ரிப்டையும்,தாண்டவம் ஸ்க்ரிப்டை யும் வாங்கிப் பாத்துட்டு,அப்புறம் தாண்டவம் படத்தையும் பாத்துட்டு பொன்னுசாமி கதை மாதிரி தான் தாண்டவம் இருக்குன்னு சொல்லிடுச்சு.அந்த விசயத்துல சங்க பொதுச் செயலாளர் அமீர் யூ டிவிக்கு ஆதராவா செயல்பட்டார்னும்,அத உண்மை அறியும் குழு வெளியிடப் போகும் தகவல் கள் லால தன்னோட இமேஜ் பாதிக்குமோ ன்னு வீட்ல இருந்து ராஜினாமா முடிவை முன்கூட்டியே சொன்னதா இந்த குழு குற்றம் சாட்டுறாங்க.எனக்கு படத்துல கதை ன்னு பேர் போடணும் னு பொன்னுசாமி சொல்றாரு.இயக்குனர் அமீர் தன்னை தரக் குறைவா பேசறதா நினைச்சு கிட்டு இந்த போராட்டக் குழு சார்ந்த உதவி இயக்குனர்கள் சங்கப் பெயரை அவமானப் படுத்துறாங்க ன்னு சொல்லி ரிசைன் பண்ணி இருக்காரு.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...